Former MDMK Executive Mallai Sathya Speech About Durai Vaiko MP 
தமிழ்நாடு

துரை வைகோவுக்கு ’மத்திய அமைச்சர்’ ஆசை : சீண்டும் மல்லை சத்யா

Mallai Sathya About Durai Vaiko : துரை வைகோவிற்கு மத்திய அமைச்சராகும் ஆசை இருப்பதால், பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக, மல்லை சத்யா மீண்டும் விமர்சித்து இருக்கிறார்.

Kannan

மதிமுகவில் பனிப்போர் :

Mallai Sathya About Durai Vaiko : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையே பனிப்போர் நீடிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக துரை வைகோ இருந்து வருகிறார். அவரை கட்சிக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே மல்லை சத்யா ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இது அண்மைக் காலமாக பகிரங்கமாக வெடித்தது. மல்லை சத்யா மீது துரோகி பட்டத்தை வைகோ சுமத்த, பதிலுக்கு மல்லை சத்யாவும் மல்லுக்கட்டுவதால், கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது. இதுவரை மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து வைகோ நீக்கவில்லை.

பாஜக பக்கம் சாயுமா மதிமுக? :

பாஜக பக்கம் மதிமுக சென்று விடும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விடும் என்று மல்லை சத்யா(Mallai Sathya on MDMK) தொடர்ந்து சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் மல்லை சத்யா சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ”மத்திய அமைச்சர் ஆகும் ஆசையில் பாஜகவுடன் துரை வைகோ நெருக்கம் காட்டி வருகிறார். வைகோ வேண்டுமானால் திமுக கூட்டணியை விரும்பலாம். ஆனால் துரை வைகோ பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறினார்.

துரை வைகோவை விமர்சிக்கும் மல்லை சத்யா :

துரை வைகோ மீதான மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியில்(DMK Alliance Seats) 12 தொகுதிகள் வரை கேட்போம் என்று கூறி வந்த துரை வைகோ, திடீரென அமைதியாகி விட்டார். மல்லை சத்யா போர்க்கொடி உயர்த்தியதில் இருந்து திமுக தலைமையுடன் வைகோ அதிக நெருக்கம் காட்டி வருகிறார். திமுக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம் என்று வைகோ கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க : தந்தையாக வெற்றி, அரசியல்வாதியாக தோல்வி : வைகோவை சாடிய மல்லை சத்யா

பாமக போல மதிமுகவிலும் மோதலா? :

ஒரு பக்கம் வைகோ திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், மல்லை சத்யா தொடர்ந்து சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள், கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வைகோவிற்கு செக் வைக்கும் விதமாகவே, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது. பாமகவில் நிலவும் தந்தை மகன் மோதல் போன்று, மதிமுகவிலும் சட்டசபை தேர்தல் கூட்டணி விவகாரம் மோதலாக வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

====