சூடு பிடிக்கும் தேர்தல் களம் :
Rajendra Balaji on TVK Vijay : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஜூரம் அரசியல் கட்சிகளுக்கு வந்து விட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என பாகுபாடு இன்றி அனைவரும் மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர்.
மக்களை குழப்பும் ஆட்சியாளர்கள் :
இந்தநிலையில், சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி(Rajendra Balaji), ஆட்சிக்கு வந்து 50 மாதங்களை கடந்த பின்பு, தேர்தல் வருவதால் ஓரணியில் தமிழ்நாடு எனக்கூறி மக்களை குழப்ப திமுகவினர் பார்க்கின்றனர்.
மொழியை வைத்து திமுக அரசியல் :
தமிழ்நாடு மக்கள் வருமானம் இன்று தவித்து வரும் நிலையில் ஸ்டாலின் குடும்பம்தான் ஓரணியில் சுபிட்சமாக உள்ளது. மொழிப் பிரச்சினையை தூண்டிவிடுவது என்பது தேர்தல் வரும்போது கருணாநிதி காலம் தொட்டு திமுக கடைபிடிக்கும் உத்தி. தமிழக மக்கள் விழிப்புடன் இருப்பதாலும், எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளதாலும் 2026 தேர்தலில்(TN Election 2026) அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.
அதிமுக கூட்டணிக்கு திருமா வரலாம் :
தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் திருமாவளவன், இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடர்வது தான் ஒவ்வாத கூட்டணி. திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்கத் தயாராக உள்ளோம்.
மேலும் படிக்க : என்டிஏ.வில் குழப்பம் இல்லை - கூட்டணி ஆட்சி பற்றி வாசன் விளக்கம்
விஜய் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் :
தேசியத்தையும், தெய்வீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது அதிமுக - பாஜக கூட்டணி(ADMK BJP Alliance) தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. விஜய் நிலைப்பாட்டில் மாற்றம் வரவும் அதிக வாய்ப்புள்ளது, இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.
===