
சட்டசபை தேர்தல் - நிர்வாகிகள் நியமனம் :
Tamil Nadu BJP State Vice President List : தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஏப்ரல் மாதம் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் பெரியளவில் மாற்றங்கள் தேவையில்லை என்றும் அமித்ஷா தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. புதிய நிர்வாகிகள் தொடர்பான பரிந்துரைகளுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) சந்தித்தார். இதைத்தொடர்ந்து பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.
தமிழக பாஜக 14 துணைத் தலைவர்கள் :
புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்(TN BJP State Vice President) செய்யப்பட்டுள்ளனர். மாநில துணைத் தலைவர்களில் ஒருவராக நடிகை குஷ்புவும் நியமனம்(Kushboo) செய்யப்பட்டுள்ளார். விபி துரைசாமி, கேபி ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா(Sasikala Pushpa), பால் கனகராஜ் உள்ளிட்டோரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழக பாஜக, மாநில பொறுப்பாளர்கள் :
மாநில பொதுச்செயலாளர்களாக பொன் வி பாலகணபதி, ராம ஸ்ரீனிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏபி முருகானந்தம் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைப்புச் செயலாளராக கேசவ விநாயகமும், பொதுச்செயலாளர்களாக 5 பேரும், மாநிலச் செயலாளர்களாக 15 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : 20வது பிரதமர் கிசான் நிதி : விவசாயிகளுக்கு விடுவிக்கிறார் மோடி
மாநிலச் செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், வினோஜ் பி செல்வம், அஸ்வத்தாமன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொருளாளராக எஸ்ஆர் சேகர், மாநில இளைஞரணி தலைவராக எஸ்ஜி சூர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலைத் தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டாவின்(JP Nadda) ஒப்புதலோடு வெளியிடுவதாகத் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த விஜயதாரணிக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
====