எஞ்சின்கள் செயலிழப்பால் விமானம் விபத்து : விசாரணை அறிக்கை அம்பலம்

Air India Plane Crash Report in Tamil : அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் எரிபொருள் தடைபட்டு, எஞ்சின்கள் செயலிழந்ததே என்பது தெரிய வந்திருக்கிறது.
Air India Plane Crash Preliminary Report in Tamil
Air India Plane Crash Preliminary Report in TamilANI
1 min read

ஏர் இந்தியா விமான விபத்து :

Air India Plane Crash Preliminary Report in Tamil : ஜூன் மாதம் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 242 பேருடன் புறப்பட்ட போயிங் 787 - 8 ட்ரீம் லைனர், சுமார் 800 அடி உயரமே பறந்த நிலையில், 30 வினாடிகளில் கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது.

விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை :

இந்த விபத்தில் ஒரேயொரு பயணியை தவிர்த்து 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி(Black Box) மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்தது.

முதற்கட்ட அறிக்கை வெளியீடு :

இதன் 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை(Air India Plane Crash Preliminary Report) இன்று வெளியானது. விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் முக்கிய அம்சங்கள் :

* விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 இன்ஜின்களும் செயலிழந்தது.

* ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என அவர் பதில் அளித்துள்ளார்.

* சில வினாடிக்கு பிறகு, எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் செயல்படத் தொடங்கினாலும், ஒரு இன்ஜின் மட்டுமே செயல்பாட்டாற்கு வந்திருக்கிறது.

* கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலுமாக உருக்குலைய காரணம்.

* விமானப் பாதைக்கு அருகில் பறவைகள் நடமாட்டம் இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.

மேலும் படிக்க : அகமதாபாத்தில் விமானம் நொறுங்கி விழுந்தது : 242 பேரின் கதி என்ன ?

* எனவே, விமானத்தில் இயந்திர செயலிழப்புக்கு காரணம் பறவைகள் கிடையாது.

* விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

* முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட அறிக்கையை கொண்டு பார்க்கும் போது, எரிபொருள் சப்ளை சரியாக உள்ளதா என்ற ஆய்வு விமானம் புறப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்படவில்லையோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in