Vice President Election 2025 : மனுதாக்கல் செய்தார் சுதர்சன் ரெட்டி

B Sudershan Reddy Files Nomination : துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
B Sudershan Reddy Files Nomination in Vice President Election 2025
B Sudershan Reddy Files Nomination in Vice President Election 2025ANI
1 min read

துணை ஜனாதிபதி தேர்தல் :

B Sudershan Reddy Files Nomination : துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் vs சுதர்சன் ரெட்டி :

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். என்டிஏ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்(CP Radhakrishnan) நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் B. சுதர்சன் ரெட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, கார்கே முன்னிலையில், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கூட்டணி கட்சிகள் சார்பில் சரத் பவார், திருச்சி சிவா, ராம் கோபால் யாதவ், சஞ்சய் ராவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க : V.P. Election 2025 : இந்தியா கூட்டணி வேட்பாளர் ’சுதர்சன் ரெட்டி’

செப். 9ம் தேதி வாக்குப்பதிவு :

இரண்டு பேர் போட்டியிடுவது உறுதியாக விட்டதால், செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்(Vice Presidential Election 2025 Date) நடைபெறும். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் முடிந்தது அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பலம் இருப்பதால், சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in