ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் தவறு : வைகோ பேச்சு, அதிமுக கண்டனம்

ADMK Condemns Vaiko Speech : ஜெயலலிதாவை சந்தித்தது அரசியலில் தான் செய்த தவறு என வைகோ பேசியிருப்பதற்கு, அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ADMK Jayakumar on MDMK Chief Vaiko Speech About Jayalalitha Meet
ADMK Jayakumar on MDMK Chief Vaiko Speech About Jayalalitha Meet
2 min read

மதிமுகவில் புகைச்சல் :

ADMK Jayakumar Condemns Vaiko Speech : மதிமுகவில் துரை வைகோ - மல்லை சத்யா இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வாரிசு அரசியலை எதிர்த்து வரும் மல்லை சத்யா, துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வந்ததை விரும்பவில்லை. ஏற்கனவே இருந்த புகைச்சல் ஒருமுறை வெளியே தெரிய ஆரம்பிக்க, இருவரையும் கைகுலுக்கச் செய்து சமாதானப்படுத்தினார் வைகோ.

யார் துரோகி ? - முற்றும் மோதல் :

இந்தநிலையில், மல்லை சத்யா கட்சிக்கு துரோகம் இழைப்பதாகவும், கட்சியை விட்டு வெளியேறியவர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகவும் வைகோ குற்றம்சாட்ட, அதற்கு துரை வைகோவுக்காக(Durai Vaiko) தனக்கு துரோகி பட்டம் கட்டப்படுவதாக கொந்தளித்தார் மல்லை சத்யா.

இந்தநிலையில், மதிமுகவின் சென்னை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில்(MDMK Meeting) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மல்லை சத்யா(Mallai Sathya) கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில் பேசிய வைகோ(Vaiko Speech), “நம்மை குறிவைத்து தாக்குகிறார்கள். நமது இயக்கம் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். எனவே கட்சியில் இருப்பவர்கள் தலைதுவண்டு விடக்கூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வந்தேன்.

நான் பத்திரிகையாளர்களுக்கு விரோதி அல்ல. பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபட்டிருக்கிறேன். ஆனால் அரங்கம் நிறைந்தபோது ஏன் புகைப்படம் எடுக்கவில்லை. எனவேதான் அரங்கத்தைவிட்டு வெளியே செல்லுங்கள் என கூறினேன். உடனடியாக பத்திரிகையாளர்களிடம் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தார்கள்.

மல்லை சத்யா மீது குற்றச்சாட்டு :

நமது கட்சி அழிக்க வேண்டும் என வெளியே போனவர்களோடு, எதிரிகள், துரோகிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் மல்லை சத்யா. அவரும் இங்கிருந்து ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு போகலாம் என திட்டமிட்டிருக்கிறார். மல்லை சத்யா என் உயிரை மூன்று முறை காப்பாறியதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் தவறு :

கூட்டணிக்காக போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தது(Vaiko Jayalalitha Meet) தான் அரசியலில் செய்த தவறு என்றும், மதிமுக கூட்டணி எப்போதும் திமுகவுடன் தான் இருக்கும் என்றும், திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்” என்றும் வைகோ பேசினார்.

மேலும் படிக்க : கூட்டணி நிலைப்பாடு,’விஜய் மாறுவார்’ : ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை

ஜெயலலிதாவால் மதிமுகவுக்கு அங்கீகாரம் :

ஜெயலலிதா குறித்து வைகோ(Vaiko About Jayalalitha) இவ்வாறு பேசி இருப்பதற்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். மதிமுகவுக்கு அரசியல் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா என்றும், வைகோ குழப்பத்தில் இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் செம்மலை(Semmalai) சாடியுள்ளார்.

வைகோவை வாழ வைத்தவர் ஜெயலலிதா :

தேர்தலில் மதிமுகவுக்கு 3 எம்பிக்கள் கிடைக்கவும், பம்பரம் சின்னம் கிடைக்கவும் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்(Jayakumar) கூறி இருக்கிறார். வைகோ நன்றி மறந்து விட்டு பேசுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். வைகோ இவ்வாறு பேசுவது அவரது பண்புக்கு அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

---

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in