
சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் :
BJP Annamalai About TVK Vijay : செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை(Annamalai Press Meet), ”துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு உள்ளார்; அவர் உறுதியாக வெற்றி பெறுவார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது, பாஜகவின் விருப்பம்.
பதவி பறிப்பு மசோதா அவசியம் :
சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறை(ED Raid) நடவடிக்கை மூலம் டில்லியில் ஒரு அமைச்சர், ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்தார்.
தமிழகத்தில், திமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் சிறையில் பல நாட்கள் இருந்தார். எட்டு, ஒன்பது மாதங்களுக்கு பிறகுதான், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனவே, மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டம்(New Constitution Amendment Bill) வரவேற்கத்தக்கது. இதன்மூலம், 'தவறு செய்தவர்கள் கட்டாயம் சிறைக்கு செல்வர்' என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.
விஜய் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் :
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, அக்கட்சி இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதேபோன்று விஜய்யின் செயல்பாடுகள் அமைய வேண்டும். மதுரை மாநாட்டுக்கு(Annamalai Wishes TVK 2nd Manadu) வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க : புதிதாக கட்சி தொடங்கினாலும் ’MGR’ தேவை : விஜய்க்கு எடப்பாடி பதில்
என்டிஏ மீது நம்பிக்கை அதிகம் :
நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மக்களின் குரலை தேசிய ஜனநாயக கூட்டணி ஒலிக்கிறது. திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கிய பின், தேசிய ஜனநாயக கூட்டணி, அந்த இடத்தில் அமரும் என, மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். எங்களின் கொள்கையை மக்கள் அதிகம் நம்புகின்றனர்” இவ்வாறு அண்ணாமலை(Annamalai Speech) தெரிவித்தார்.
==================