
தவெக செயலி ’மை டிவிகே’ :
Tamilisai Soundararajan About TVK Vijay : சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கான ’மை டிவிகே’ செயலியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு'' என்ற செயலியையும் வெளியிட்டு, கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
அண்ணா வழியில் பயணம் :
”1967, 1977 ஆகும். அதே மாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது. மாற்றம் நிச்சயம். அண்ணாதுரை சொன்னதை நானும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ். மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, இதனை சரியாக செய்தால் போதும், ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் எல்லா குடும்பத்தினரையும் உறுப்பினராக சேர்த்து, நம்ம கண்டிப்பாக ஜெயிக்க முடியும்” இவ்வாறு நடிகர் விஜய் பேசி(TVK Vijay Speech) இருந்தார்.
விஜய்க்கு பாஜக பதிலடி :
இதற்கு தமிழக பாஜக எதிர்வினை ஆற்றி இருக்கிறது. அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வலைதள பதிவில், ”தவெகவின் “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” நாடகத்துக்கு மக்கள் ஆதரவு இருக்காது. தவெகவினர்(TVK) எப்போதும் மக்களிடம் இருந்து விலகி இருந்தவர்கள்”
’ஆப், அப்பா’ இனி ஆதரவு கிடைக்காது :
அண்ணா வழியில் பயணிப்போம் என்று கூறும் விஜய்(TVK Vijay About Anna), தனிக்கட்சி ஏன் தொடங்க வேண்டும்?. தமிழ்நாட்டில் இனி ஆப்பிற்கும் ஆதரவு கிடையாது அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது.. ஓரணியில் தமிழ்நாடு என்கிற நாடகத்திற்கு மக்களின் ஆதரவு கிடையாது ஏனென்றால் இன்று இவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகி இருக்கிறார்கள்.
தனிக்கட்சி எதுக்கு தம்பி? :
வெற்றி பேரணியில் தமிழ்நாடு நாடகத்திற்கு ஆதரவு கிடையாது. ஏனென்றால் இவர்கள் எப்போதுமே மக்களிடம் இருந்து விலகி இருந்தவர்கள். "அண்ணா "வழியில் செல்வதற்கு இன்னொரு கட்சி எதற்கு "தம்பி"? “ என தமிழிசை சவுந்தரராஜன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
====