MDMK: மல்லை சத்யா உண்ணாவிரதம் : வைகோ அதிருப்தியாளர்களுக்கு அழைப்பு

Mallai Sathya Protest Against MDMK : வைகோவால் கைவிடப்பட்ட மதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று மல்லை சத்யா அழைப்பு விடுத்திருக்கிறார்.
Mallai Sathya Hunger Strike Protest Against MDMK Chief Vaiko
Mallai Sathya Hunger Strike Protest Against MDMK Chief Vaiko
1 min read

வைகோவின் வலது கரம் மல்லை சத்யா :

Mallai Sathya Protest Against MDMK : மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக, வைகோவின் வலது கரமாக இருந்தவர் மல்லை சத்யா. கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் அவர் இருக்கிறார். வைகோவின் மகன் துரை வைகோவை, கட்சிக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்த மல்லை சத்யா, படிப்படியாக ஓரம் கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் வைகோவால் துரோகி முத்திரை குத்தப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த மல்லை சத்யா, மதிமுக கூட்டங்களை புறக்கணித்தார். மேலும் வைகோ, துரை வைகோவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

மல்லை சத்யா உண்ணாவிரதம் :

வைகோ தன்மீது வைத்த கடும் குற்றச்சாட்டுகளுக்கு நீதி கேட்டு ஆகஸ்டு 2ம் தேதி, அதாவது நாளை மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்(Mallai Sathya Hunger Strike) மேற்கொள்கிறார். சென்னையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எதேச்​சா​தி​கார போக்​கில் துரோகப் பட்​டத்தை சுமத்தி ஒவ்​வொரு கால​கட்​டத்​தி​லும் நிர்​வாகி​களைத் தொடர்ந்து வைகோ வெளி​யேற்றி வந்​தார் என்​பதை நாடு உணர்ந்​துள்​ளது.

துரோகி என களங்கப்படுத்துவதா? :

32 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய கட்​சியி​லிருந்து என்னை துரோகி என்று சொல்லி களங்​கப்​படுத்தி அரசி​யலிலிருந்து துடைத்​தெறிய வைகோ முயற்​சிப்​ப​தோடு, சகாக்​களை கொண்டு அவதூறு பிரச்​சா​ரம் செய்து காயப்​படுத்​துகிறார். உட்​கட்சி ஜனநாயகத்​தைப் பாது​காக்க நாளை சென்னை தீவுத்​திடல் அரு​கில் சிவானந்த சாலை​யில் காலை 9 மணி​முதல் மாலை 5 மணிவரை உண்​ணா​விரத அறப்​போ​ராட்​டம் நடத்​துகிறோம்.

மேலும் படிக்க : ’துரை’க்காக எனக்கு ’துரோகி’ பட்டமா? : வைகோவை சாடும் மல்லை சத்யா

வைகோவால் கைவிடப்பட்டோர் வாருங்கள் :

கட்​சிக்​காக உழைத்து களைத்​துப் போனவர்​கள், வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் வர வேண்​டும். தலை​வனா தொண்​டனா என்று வரும்​போது தலை​வர் பக்​கமே நின்று பழக்​கப்​பட்ட பொது சமூகத்​தின் பொது புத்தி முதல் முறை​யாக ஒரு தொண்​டனின் பக்​கம் நின்று இருப்​பதை நாடு பார்த்​துக் கொண்டு இருக்​கிறது” இவ்​வாறு மல்லை சத்யா(Mallai Sathya) கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in