
ட்ரம்பின் சர்ச்சை நடவடிக்கைகள் :
Donald Trump US Trade War : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே, சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுப்பதில் டோனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். குடியுரிமை விவகாரம், வெளிநாட்டவர் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பி வைப்பு, உலக நாடுகள் மீது புதிய வரி விதிப்புகள் என அவரது பட்டியல் நீள்கிறது.
இந்தியா மீது 25% வரி விதிப்பு :
ரஷ்யாவுடன் இந்தியா நட்புடன் இருந்து வர்த்தக உறவுகளை பேணி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத டோனால்ட் ட்ரம்ப்(Donald Trump Tariffs on India), நம் நாட்டின் மீது 25% வரியை விதித்து இருக்கிறார். இது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதை 7ம் தேதி வரை தள்ளி வைத்திருக்கிறார் டோனால்ட் ட்ரம்ப்.
92 நாடுகள் மீது புதிய வரிகள் :
இந்தியாவுக்கு 25% வரி விதித்தது போல, 92 நாடுகள் மீது 10% முதல் 41% வரை புதிய வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பு கட்டணங்கள் இன்று முதல் ஒரு வாரத்திற்குள் படிப்படியாக அமலுக்கு வருகின்றன. வர்த்தக கூட்டாளிகள் வரிகளை விதித்து வாட்டும் அதிபர் டோனால்ட் ட்ரம்ப், மறைமுகமாக தனது நாட்டு மக்களையும் இக்கட்டில் ஆழ்த்தி உள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி பாதிப்பு :
வரிவிதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அமெரிக்காவில் கணிசமாக குறையும். அதிகபட்சமாக சிரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 41% வரி விதிக்கப்பட்டுள்ளது.
தைவான் ஏற்றுமதிக்கு 20%, தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30% வரி ஆகியவை அடங்கும். பாகிஸ்தான் மீது 19% வரி விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐஸ்லாந்து, பிஜி, கானா, கயானா மற்றும் ஈக்வடார் ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 15% வரி விதிக்கப்படும்.
மேலும் படிக்க : "Backfire" ஆகும் 25% வரி : ட்ரம்ப் மீது அமெரிக்கர்கள் காட்டம்
ஏழ்மை நாடுகள், ட்ரம்ப் கருணை :
உலகின் மிகவும் ஏழ்மையான மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்கும் அபராதம் விதிக்கும் வகையில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து கூட 39% என்ற அதிகபட்ச வரியை எதிர்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்டு, அக்டோபர் 5ம் தேதிக்குள் அமெரிக்காவை வந்தடையும் பொருட்களுக்கு புதிய வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் பொருட்களுக்கு வரி விதிப்பு பொருந்தும்.
====