USA தேர்தலில் குடியரசு கட்சி படுதோல்வி : அதிபர் டிரம்ப் அதிர்ச்சி

Donald Trump's Republican Party in US Mayor Election 2025 : அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் நடந்த தேர்தலில், அதிபர் டிரம்ப் கட்சி (குடியரசு கட்சி) படுதோல்வி அடைந்துள்ளது.
US President Trump's Republican Party suffered crushing defeat in the elections held in various states
US President Trump's Republican Party suffered crushing defeat in the elections held in various statesGoogle
1 min read

சர்ச்சை நாயகர் டொனால்டு டிரம்ப்

Donald Trump's Republican Party in US Mayor Election 2025 : அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பதவியேற்றதில் இருந்து டொனால்டு டிரம்ப், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. குடியேற்ற விவகாரம், விசா கட்டுப்பாடுகள், பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

மாகாணங்களில் தேர்தல்கள்

இது பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கடுமையாக எதிரொலித்து இருக்கிறது. டிரம்ப் 2வது முறை அதிபரான பிறகு முதன்முறையாக இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

டிரம்ப் கட்சி படுதோல்வி

மாகாண கவர்னர்கள், அட்டர்னி ஜெனரல் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் டிரம்ப்பின் குடியரசு கட்சி படுதோல்வியை தழுவியுள்ளது.

குடியரசு கட்சி தோல்வியடைந்த மாகாணங்கள் :

  • வெர்ஜினியா மாகாண கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஸ்பான்பெர்கர், டிரம்ப் கட்சியின் (குடியரசு கட்சி) வேட்பாளரை தோற்கடித்தார். அட்டர்னி ஜெனரல் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கசாலா ஹாஸ்மி வெற்றி பெற்றார்.

  • நியூஜெர்சி மாகாண கவர்னர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த மிக்கி செரில், டிரம்ப் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். நியூயார்க் மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் மம்தானி, டிரம்ப் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். இவர் டிரம்பின் கடும் எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மாசாசுசெட்ஸ் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த மிசேல் வூ வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

  • கலிபோர்னியா மாநிலத்தில் மாவட்ட தொகுதி மறு வரையறை தொடர்பான ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் மக்கள் ஓட்டளித்துள்ளனர். இதன் மூலம் கலிபோர்னியா மாநிலத்தில் ஜனநாயக கட்சியின் நிலை வலுவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி

டிரம்ப் அதிபராக 2வது முறை வெற்றி பெற்ற பிறகு எடுத்த தடாலடி முடிவுகள் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. அரசு துறைகளை குறைப்பது, அரசு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது என அவரது முடிவுகளால் தினமும் அமெரிக்க அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.

டிரம்ப் பரபரப்பு பேட்டி

இந்தநிலையில், தற்போது வந்திருக்கும் தேர்தல் முடிவுகள் டிரம்ப் ஆட்சியின் மீதான கருத்துக் கணிப்பாகவே கருதப்படுகிறது. தேர்தல் தோல்வி பற்றி கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், 'வேட்பாளர் பட்டியலில், எனது பெயர் இல்லாததும், அரசு நிர்வாகம் முடக்கப்பட்டது காரணம்'' என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறார்.

மாகாண தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜனநாயக கட்சியை சேர்ந், முன்னாள் அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in